என்னைப் பற்றி

இந்தப் பதிவுகளை படித்த எனது தோழர்கள் ஓரிருவர் உன்னுடைய வலைப்பதிவு என்கிறாயே உன்னைப் பற்றி எங்குமே பதிவுகள் இல்லையே என்று குறைபட்டுக்கொண்டார்கள் நன்றாய் சிந்தனை செய்யும் இடத்து அவர்கள் கூற்றும் மேய்யேன்வேப் பட்டதை உணர்ந்து இதைநான் எழுதுகிறேன் 

எனது பெயர்: ம. ஜாண் ரூபட் நான் செய்த இலக்கண ஆய்விலிருந்து இதை ம. ஃட்சாண் ரூபட் தனித்தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுத முடியும்.

எனது ஊர்: நாஞ்சில் நாடாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் எனும் ஓர் ஊர் தற்போது அது பணங்கொளுத்த  பேரூர் நாகரிக உடையை விடுத்து உடலமைப்பு தெளிவாய் புலப்படும் வண்ணம் அநாகரிக உடைதரிக்கும் மக்கள் பெருகுவதாலோ அகம்பாவம் நிறைந்த மக்கள் பெருகுவதொலோதான் இது பேரூர் என அழைக்கப்படுகிறது எனத் தோன்றுகிறது ஒழுக்கத்துடன் நாகரிகம் பொருந்திய மக்கள் வாழ்வதே ஊரெனக்கொளின் உண்மையில் மாக்கள் பல திரியும் காட்டில் அமைந்த ஓர் சிற்றூர் என்பதே பொருத்தம்

எனது பள்ளி: தொடக்கநிலை ‘புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி’-இல் நடுநிலை உயர்நிலை மேல்நிலை அனைத்தும் ‘புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி’-இல் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் ‘நேஷனல் பொறியியல் கல்லூரி’-இல்

ஈடுபாடு: விவசாயம் தமிழ் ஒழுக்கம் தமிழ்கலாச்சாரம் மரபுப்பேணல் இசை இசையாராய்ச்சி இயற்பியல் (குறிப்பாய் மின்னணுவியல் இயந்திரவியல் ஒலியியல் ஒளியியல் காற்றோடியங்குவியல் அணுவியல் காந்தவியல்) புவியியல் மறையாய்வு கணிதவியல் (குறிப்பாய் வகைநுண்கணிதம் தொகைநுண்கணிதம் திரிகோணமிதி பகுமுறைவடிவகணிதம் பல்லுறுப்புக்கோவை பலபடிச்சமன்பாடு) வானியல் தொன்னுட்பம்தோண்டல் பண்டையக்கணிதமறிதல்  இறைப்பற்று சமூகசீர்த்திருத்தம் நாகரிகமீட்டல் செய்யுளியற்றல் தமிட்புகழுணர்த்தல் வேதியியல் உலோகவியல் உளவியல் நாட்டுப்புறக்கலைகள்

படித்ததில் பிடித்தவை: விவேகசிந்தாமணி தொல்காப்பியம் திருக்குறள் மூதுரை சிலேடை

கேட்டதில் பிடித்தவை: வகுப்பியலிசை பழந்தமிழ்ப்பாட்டு அம்மாவின்கதைகள்

குணப்பொருத்தம்: என் அண்ணன் ம. ஜஸ்ற்றின் ஹெர்பட் (ம. ஃட்சஃச்_ற்றின் ஃகெர்பட்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: