ஆய்த எழுத்து
(இதையும் பலர் சரியாக ஒலிப்பதில்லை)
பலர் ஆயுத எழுத்து என்று கூறுவார். கேடயத்தின் புள்ளிகளைப் போல் அமைந்துள்ளதால் அது ஆயுதம் என அழைக்கப் பட்டது என்பரும் உளர்.
இப்படி தான் பள்ளிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆனால் உண்மை யாதெனில் இது ஆய்த எழுத்து. முப்புள்ளி வடிவம் பிற்காலத்தில் கொடுக்கப் பட்டதே. ஆயுத எழுத்து அல்ல. ஆயுதம் என்பது வடமொழிச் சொல் என்பதையும் இங்கு நாம் அறிவது வேண்டும்.
இது ஒரு சார்பு எழுத்து இதற்கென்று தனி ஒலிவடிவம் கிடையாது. குற்றிய உகர இகரங்களைப் போல் இது ஒரு சொல்லிலமைந்தால் தான் ஒலிவடிவம் பெறும். குற்றிய உகர இகரங்களில் உகர இகரங்கள் மெய்யில் ஏறி மெய்போலகிவிடுவது போல் ஆய்தம் தான் இடப்பெயர்வு செய்த வல்லின மெய்யில் ஆய்ந்து விடுகிறது. அதாவது அந்த எழுத்தின் மேல் பதிந்து விடுகிறது.
எப்படி என்று பார்ப்போம்
அல் + திணை = அற்றிணை (திணை அல்லன = ஒழுக்கம் அற்றவை)
இதில் ற் என்ற எழுத்தை நீக்கி ஆய்தம் வந்து அஃறினை ஆகிறது. இதை பலர் அக்றிணை என்று சொல்லுவர். இது மிகுந்த தவறு
ஃ என்பதற்கு க் எனும் ஒலி கொடுக்கப் பதில் அது தனி ஒலிவடிவம் பெற்றதாய் ஆகிறது இதனால் அதன் சார்புத் தன்மை கெடும்.
எஃகு என்பது எக்கு என்பதிலிருந்து வருவிக்கப் பட்டது இதனை எஹ்ஹு என்று வாசிக்க வேண்டும்
அஃது என்பது அத்து என்பதிலிருந்து வருவிக்கப் பட்டது இதனை அத்து(நாக்கு பல்லில் படாமல்) என்று வாசிக்க வேண்டும்.
கஃசா என்பதை kassa என்று வசிக்க வேண்டும்
ஃ வந்தால் கீழ்வாயும் அதன் எந்த உறுப்பும் மேல் தொடக் கூடாது இதனால் தான் f எனும் எழுத்தை எழுதுவதற்கு ஆய்த எழுத்தின் துணையை முன்னோர் நாடினர் ஹ எழுதுவதற்கும் பயன் படுத்தினர்.
ப என்பதை மேல் உதடு கீழ் உதடுடன் இணையாது சொல்லிப் பாருங்கள் fa என்றாகும்.
க என்பதை நா(கீழ்வாய் உறுப்பு) அண்ணத்துடன்(மேல்வாயுறுப்பு) இணையாது சொல்லிப் பாருங்கள் ஹ என்றாகும்.
அகத்தியரின் இலக்கண நூலில் இதை அகேனம்(அஃகேனம்) என்றுமாற்றி இதனை வடமொழி அஹ எனும் எழுத்திலிருந்து தோன்றியதாக காட்ட முயற்சிக்கப் பட்டது என்றே கூறலாம். ஆனால் இப்படி அது தனி ஒலிவடிவம் பெறுவது சார்பெழுத்தாகுதலின் தகுதியிலிருந்து அதை நீக்கி விடும். சார்பெழுத்து என்பது திண்ணம் ஆதாலால் அஹ எனும் ஒலிவடிவம் தவறானதே. அஹ என்பதை மனதில் நிறுத்தியே அஃது என்பது அஹ்து என்று ஒலிக்கப் படுகிறது. இப்படி ஆனதற்கு பின்னால் தமிழ் மொழி எதிர்ப்பாளர்களின் வஞ்சனையும் இருக்கலாம்.
இனியாவது சரியாய் ஒலிக்க முயலலாம்.