Archive for ஒக்ரோபர், 2011

ஒக்ரோபர் 26, 2011

Hydrogen – க்கான தமிழ்ச் சொல்

Hydrogen – க்கான தமிழ்ச் சொல் 

Hydragen = நீராக்கி

     பிற மொழிச் சொல்லை தமிழ் மொழிக்கு பெயர்க்கையில் மூலச் சொல் உதவி கொண்டு மொழி பெயர்த்தால் தான் பொருளுள்ள சொல்லை உண்டாக்க முடியும்

     அங்ஙனம் பார்க்கில் ‘Hydrogen‘ எனும் சொல் ‘Hydro’ ‘Gen’ எனும் இரு பதங்கள் அடங்கியது ஆகும் Hydro என்றால் நீர்மம் பொருள் படும்  Gen என்றால் உண்டாக்கு பொருள் படும் உண்டாக்கு என்பதை ஆக்கு என்றும் சொல்லலாம் ஆக Hydrogen என்பதை நீர்மமாக்கி என்று குறிக்கலாம் ஆனால் எல்லா நீர்மங்களும் Hydrogen ஆல் உண்டாக வில்லை இதனால் நீராக்கி என்று சொல்வதே மிகப் பொருத்தம்

 என்னுடைய பரிந்துரை

     Hydrogen = நீராக்கி   (நீராக்கி வளி என்றும் கூறலாம்

Advertisements
குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 26, 2011

Gene – க்கான தமிழ் சொல்

 Gene – க்கான தமிழ் சொல். 

 …Gene = பிறைமையம்

     தமிழ்ச்சொல் உருவாக்கம் மூலச்சொல்லைக் கொன்டு அமைந்தால் தான் பொருளுள்ள சொல்லை உருவாக்க முடியும்.  அங்ஙனம் பார்க்கில். ‘Gene’ என்பதன் மூலச் சொல் ‘Gen’ ஆகும் இதன் பொருள் பிறப்பு உண்டாக்கு என்பனவாகும் இதனை முதலில் பயன்படுத்தியவர் Wilhelm L. Johannsen என்பவரே ஆவார் பிறவிப் பண்புகளை எடுத்துச் செல்வதால் தான் அதற்கு இப்பெயரை வைத்தார் ஆக Gene என்னும் பததிற்கு தமிழ் சொல் காணுகையில் பிறவிப் பண்பைக் கொண்டது எனும் பொருள் வெளிப்படுமாறு சொல் அமைய வேண்டும் பண்பிற்கு தன்மை குணம் என்பன பொருளாய் வரும் இப்பொழுது பிறப்பு எனும் பதத்தையும் பண்பு எனும் பதத்தையும் இணைக்க வேண்டும்.
…
…    இதற்கு தன்மை எனும் சொல் எவ்வாறு தொன்றியது என்ற ஆராய்ச்சி கை கொடுக்கும் தன் பண்பு என்பதே தன்மை ஆயிற்று இதற்கு ஆதாரங்களாய் இறைமை (இறை பண்பு) ஆண்மை (ஆண் பண்பு) பெண்மை (பெண் பண்பு) பேதமை (பேதை பண்பு) போன்ற பதங்களைக் கூறலாம் ஆக பிறப்பு பண்பு என்பதை பிறமை என்று கூறலாம் ஆனால் ஒசை அமைதி விதி கருதி இதை பிறைமை என்று மாற்றுவதே நலம்
…
…    இப்பொழுது பிறப்பும் பண்பும் இணைந்து பிறைமை ஆகிவிட்டது ஆனால் பிறைமை என்பது ஒரு பொருளைக் குறிப்பது போல் இல்லை இதற்காய் அம் விகுதி சேர பிறைமையம் ஆகும்
…
…என்னுடைய பரிந்துரை
…Gene = பிறைமையம்
…     பிறைமி, பிறைமியம் என்றும் கொள்ளலாம்

குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 21, 2011

21-10-2011

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

 1. அலமாரி
  1. பேழை
 2. கீர்த்தி
  1. புகழ்
 3. சபை
  1. மன்றம்
 4. சவால்
  1. அறைகூவல்
 5. சாவி
  1. திறவுகோல்
  2. தாழ்கோல்
 6. நமஸ்காரம்
  1. வணக்கம்
 7. நிம்மதி
  1. மன அமைதி
  2. கவலையின்மை
  3. வருந்`தாது
 8. நிர்மூலம்
  1. வேரில்லா
  2. வேரறு
  3. மூலமில்லா
  4. கருவறுந்த
 9. பவித்ரம்
  1. களங்கமில்லா
  2. களங்கா
 10. ஸ்துதி
  1. பாராட்டு
  2. புகழ்ச்சி
 11. ஜ்வலித்தல்
  1. மிளிருதல்
 12. ஜ்வாலை
  1. சுடர்
 13. ஜாஸ்தி
  1. மிகுதி
 14. ஜோதி
  1. ஒளி
குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 16, 2011

16-10-2011

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

எமன்

  1. காலன் 

காயம்

  1. உடல்
  2. புண்

கோஷம்

  1. முழக்கம்

சம்பாஷனை

  1. உரையாடல்

சூரியன்

  1. பரிதி
  2. வெய்யோன்
  3. பகலோன்
  4. ஞாயிறு
  5. கதிரவன் 

தைலம்

  1. மருந்து

ரசம்

  1. சாறு

லட்சணம்

  1. இலக்கணம்
  2. ஒழுங்கு

வர்ணம்

  1. நிறம்

விஷ்வம்

  1. பெரிய 

ஜூஸ்

  1. சாறு
குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 13, 2011

13-10-2011

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

அதிர்ஷ்டம்

 1. கருதாநலம்
 2. நோக்காநலம்
 3. எதிர்பாரா வாய்ப்பு

அனுகூலம்

 1. சாதகம்
 2. ஒத்துழைப்பு
 3. உதவி
 4. ஒத்தாசை

அனுசரணை

 1. இசைவு
 2. உதவி

அனுபவம்

 1. துய்த்தறிவு
 2. துய்ப்பு
 3. பட்டறிவு

சனி

 1. காரி

சிங்கம்

 1. அரி

துரதிர்ஷ்டம்

 1. கருதாகேடு
 2. நோக்காகேடு
 3. பாராகேடு

ப்ரச்சாரம்

 1. பரப்புரை

ரெடி

 1. ஆயத்தம்

ஜாமீன்(ஜாமின்)

 1. பணையம்

ஜோதிடம்

 1. நிமித்தம்
குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 11, 2011

கன்னியாக்குமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள் (Pure Thamizh(Tamil)) words from kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய தமிழ் சொல்கள் நாம் பல நேரத்தில் இவற்றை மலையாளம் என்று கருதுவோம்.

சாடு – பாய் (பாய்தல்)      ஆதாரம்: காண்க பாடல் 1 (அரிச்சந்திர புராணத்திலிருந்து)
உணக்கல் – காய செய்தல்    ஆதாரம்: காண்க பாடல் 2 (திருக்குறள்)
தகராறு – (ப்ரச்சனை என்று வடமொழியில் பலர் இதை கூறுவார்)
அலத்தல், அலப்பு – பேராசை, ஆசைநோய் – ஆதாரம்: காண்க பாடல் 3 (திருக்குறள்)
பீடு – பெருமிதம் ஆதாரம்: காண்க பாடல் 4 (திருக்குறள்)
பீலி – மயிலிறகு, இறகு ஆதாரம்: காண்க பாடல் 5 (திருக்குறள்)
ஓர்மை – உணர்வு, கருத்து, ஞாபகம். ஆதாரம்: காண்க பாடல் 6 (திருக்குறள்)
உறைப்பு – திண்ணம் (நிச்சயம்), ஆதாரம்: காண்க பாடல் 7 (பெரியபுராணம்)
அற்றம் – இறுதி, முடிவு, கரை ஆதாரம்: காண்க பாடல் 8 (திருக்குறள்)
அங்கணம் – உள்முற்றம், கழிவுநீர் மடை ஆதாரம்: காண்க பாடல் 9 (திருக்குறள்)
வெதுப்பு – சூடாக்கு ஆதாரம்: காண்க பாடல் 10 (கம்பராமாயணம்)

பாடல் 1

அதிபார தனபார அதிரூப மலர்மானை அனையாய் இவன்
நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத சிறை வாவியில்
மதியாமல் வலைபீறி வேடிபோன பருவாளை வளைபூ கமேல்
குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு குடநா டனே

– அரிச்சந்திர புராணம் 322

பாடல் 2

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
– திருக்குறள்

பாடல் 3

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

– திருக்குறள் 1303

பாடல் 4

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

– திருக்குறள் 1014

பாடல் 5

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

– திருக்குறள் 475

பாடல் 6
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பாடல் 7

நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன்
ஒன்ரியாயமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி நுறைப்பாலே
வென்றவர்தந் திருபேரோ வேறொருபேர் எனவெகுள்வார்

– பெரியபுராணம் 1795

பாடல் 8

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

– திருக்குறள் 421

பாடல் 9

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொள

– திருக்குறள் 720

பாடல் 10

வந்து கார் மழை தோன்றினும், மா மணிக்
கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்;
இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும்
வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள்

– கம்பராமாயணம் 2811

திரிந்த தமிழ்சொல்கள்

சவுட்டு = சுவட்டு(சுவடு ஏற்படச்செய்) –> சவுட்டு(அகர உகர இடமாற்றம்)

 • போல்மம்: மிஞிறு = ஞிமிறு;

ஒலுங்கு = கொசுகு
துறையல் = திறவுகோல் –> துறையல்
தாக்கோல் = தாழ்கோல் –> தாக்கோல்
சாணாங்கி = சாணகம் –> சாணாங்கி
உச்சை = உச்சி பொழுது –> உச்சை பொழுது –> உச்சை
வெள்ளனே = காலையிலே
சால்ரா
வண்ணம் = பருமன் (நிறம் எனும் பொருள் தவறானது வடமொழியான வர்ணத்திலிருந்து வந்தது)

 • இதற்கு பொருட்டு என்று பொருள் உண்டு
 • பொருட்டாக கொள்ளப்படும் அளவிற்கு பருமன் உடையது எனும்பொருளில் வண்ணம் எனும் கையாளப்படுகிறது
 • ஓரளவிற்கு பருமனோ மதிப்போ இருந்தாலொழிய மக்கள் எதையும் பொருட்டே கொள்ளார்
குறிச்சொற்கள்: , ,