அன்னையின் தோளில்-பிறப்பு:I

எனது வெண்பா: அன்னையின் தோளில்!

பிறப்பு:
ஐயிரண்டு திங்களதே தீங்கொட்டா காத்திடுந்
தன்தா யவளை வலிசெய் துவந்தனன்
உயிர்பிரி நொந்தி டினுமென் னுயிர்தந்
தனளே உவந்தே கனிந்து

கெடுத்திடு மூணினையே கேடுதன்னை கொன்றிடவே
கெடுத்திட்டள் நைந்திடவே துன்புறினும் பிள்ளைக்காய்
உவந்திட்டள் துன்புறுவேன் எத்துணையும் பொன்மகவே
உனக்காக வென்றாள் துணிந்து

பேறுகாலம் வந்ததுவே மெய்நடுங்கு நோவுடனே
பெற்றனளே தன்றளிரை மெய்பொறுத்து பேறென்று
கொண்டனளே இன்கண்ணீர் நோவென்ற வின்பத்தில்
தவித்தனளே நோமிகுக வென்று

இன்னும் அகவும்….

அசை வாய்பாடு
பாடல் 1  :

நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை
நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநிரை
நிரைநிரை நேர்நேர் நிரைநேர் நிரைநேர்
நிரைநேர் நிரைநேர் நிரைநேர்

புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளம்
தேமா புளிமா புளிமா கருவிளம்
கருவிளம் தேமா புளிமா புளிமா
புளிமா புளிமா பிறப்பு

பாடல் 2  :
நிரைநிரை நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர்  நிரைநேர்

கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
புளிமாங்காய் தேமா பிறப்பு

பாடல் 3
:

நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர்
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர்
நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர்

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

தொகுந்த விளக்கம்.
ஐந்து இரண்டு மாதங்கள் (பத்து மாதங்கள்) தீங்கு ஏதும் நேர்ந்துவிடாமல் கண்ணும் கருத்துமாய் காத்துவந்த தனது தாய்க்கு மிகுந்த சிரமத்தையும் வலியையும் கொடுத்து மகவானது பிறக்கிறது (தன்மையில் இதை நான் பிறந்தேன் என்று கொள்ளலாம்).  உயிரானது உடலைவிட்டு பிரியுமளவுக்கு வலி ஏற்படினும் அதையெல்லாம் எனக்காக பொறுத்துக்கொண்டு எனக்கு உயிர்கொடுத்து மண்ணில் பிறக்கச் செய்தாயே என்மேல் மகிழ்வுடன் கனிவுசெய்து.   (என்னே உங்கள் பாசம்!!!)

கேடும் தரும் உணவுகளை எனக்கு எந்த கேடும் வரக்கூடாது என்பதற்காக நீங்கள் நாடவில்லை (பத்தியம் காத்தீர்கள்).  இந்தப்பத்தியத்தின் பொருட்டு உங்கள் உடலும் மனமும் நலிந்துபோகும் அளவிற்கு துன்பம் கொண்டாலும்வயிற்றில் வளரும் என் அருமை மிகுந்த குழந்தைக்கு என்று நீங்கள் மகிழ்ந்தீர்கள்.  இதெல்லாம் போருட்படுத்துவதற்குரியதா? உனக்காக எத்தனை எத்தனை எனினினும் துன்பப்படுவேன் என்று தன் மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டாள் என் அன்னை.

என்னை பெற்றெடுக்கும் காலம் வந்தது.  உயிர் இருக்கிறதா இல்லையா என்று தொன்றும்படிச் செய்து விடும் உணர்வற்ற நிலையை தரும் வலிதான் என்றாலும் எனக்கு இது பெறர்க்கரிய பேறென்று, தன்னுடைய உடலின் மிகுந்த வலியையும் பொறுத்து பெற்றார்கள்.  அதுவரை வலி, எதிர்பார்ப்பு, அச்சம், இன்பம், கிளர்ச்சி இவைகளால் வடிந்திருந்தக்கண்ணீர் இது என்பிள்ளை தரும் இன்ப வலி என்ற இன்பமிகுதியால் இன்பக்கண்ணீராக மாறிவிட கண் முழுதிலும் திவலைகளாக முகத்திலும் இன்பக்கண்ணீர் கொண்டிருந்தார்கள்.  இங்ஙனம் மகனுக்காக நான் உடலில் கொள்ளும் வலி மிகாதோ? அதனால் என் மனதில் மகிழ்வும் பொங்காதோ என்று என்தாயார் ஏங்கினார்கள்.

English translation
(If you see this song with first person subject).
I was given birth after I had been taken care without even a minute hurt or harm to me by my mother for ten months. Though she protected me with such a great care, I gave lot of pain to her on my entry to the outside world. The pain was intolerable and huge. And can extract her life out of her body. Even then she gave me the life with fruitfulness and pleasure.

She killed (avoided) all the food which may harm to me. (Followed some food restrictions to make me healthy). Due to what she became weak physically and mentally. Even if she had such miserableness, she enjoyed it as priceless thing and unachievable thing with the thought “for my lovely growing child on my womb”. And she was thinking “Are all these accountable to me?.. I will accept lots and lots of miserableness for you, my golden child”

The delivery time came. Though the pain is huge, can make her unconscious and can question her survival, she delivered me by accepting everything with the feeling that it is unachievable merit. Till at the critical time her eyes were filled with tears of pain, pleasure, fear, excitation, curiosity or expectation. But at that peak time as she start to think that this is enjoyable pain my lovely child gives. With that great feel all tears over her eyes and face become the tears of joy. Then she started to feel “won’t this pain increase? And won’t this great pleasure overfill my small heart because of that enjoyable pain?”

(I think that I am unable to explain completely as in the poem or as in the thamizh(tamil) explanation.)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: