ஜனவரி 22, 2013

Oxygen – க்கான தமிழ்ச் சொல்

Oxygen = அமிலமாக்கி
…     பிற மொழிச் சொல்லை தமிழ் மொழிக்கு பெயர்க்கையில் மூலச் சொல் உதவி கொண்டு மொழி பெயர்த்தால் தான் பொருளுள்ள சொல்லை உண்டாக்க முடியும்
…
…     அங்ஙனம் பார்க்கில் ‘Oxygen‘ எனும் சொல் ‘Oxys’ ‘Gen’ எனும் இரு பதங்கள் அடங்கியது ஆகும் Oxys என்றால் அமிலம் என பொருள் படும்  Gen என்றால் உண்டாக்கு என பொருள் படும் உண்டாக்கு என்பதை ஆக்கு என்றும் சொல்லலாம் ஆக Oxygen என்பதை அமிலமாக்கி என்று குறிக்கலாம் ஆனால் ஏற்கனவே அதற்கு உயிர்வழி என்று இன்னொரு பெயரும் உள்ளது உயிர்வாழ இந்த Oxygen வாயு மிகவும் தேவையாதலால் இப்படிப் பெயர் வந்தது அனால் காரணப் பெயராக இருக்க வேண்டும் என விரும்பும் நிலையில் அமிலமாக்கி என்று பெயர் கொள்ளலாம்.
…
…என்னுடையப் பரிந்துரை.
…
…     Oxygen = உயிர்வளி அல்லது அமிலமாக்கி

Advertisements
குறிச்சொற்கள்:
ஓகஸ்ட் 6, 2012

தமிழ் எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறை – 3(Proper pronunciation of Thamizh letters – 3)

றகரம்
…
…டகரம் றகரம் தகரம் இவற்றின் இன எழுத்துகளான ணகரம் னகரம் நகரம் என்பவை ஒரேபோன்ற ஒலிப்பு முறையை உடையன
…சற்று கவனித்தால் மட்டுமே வேறுபாடு புலப்படும்
…இது போலவே டகரம் றகரம் தகரம் என்பவை ஒத்த ஒலிப்புமுறையைக் கொண்டிருக்க வேண்டும்
…அனால் டகரமும் தகரமும் tda tha என்ற ஒலிப்பினை பெற்று றகரம் மட்டும் Ra அல்லது tRa எனும் ஒலிப்பைப் பெறுவது முரணானது
…தொல்காப்பிய இலக்கணப் படி நோக்குங்கால் தகரம் நகரத்தைப் போன்று பல் அல்லது அண்பல்(பல்லும் வாயும் இணையும் பகுதி) என்ற இடத்தில் நா பொருந்த பிறக்கிறது
…டகரமோ ணகரம் போன்றே அண்ணத்தில் நுனிநா வீங்கி அழுந்திப் பொருந்த உருவாகிறது

…இதைக் கொண்டு பார்க்கும் போது றகரம் னகரம் பிறக்கும் அதே இடத்திலும் அதே அளவு அழுத்ததிலும் பிறக்கவேண்டும் அதாவது நுனிநா விரிந்து அண்ணத்துடன் ஒற்றும்போது பிறக்கவேண்டும் அதே நேரம் டகரத்தையும் தகரத்தையும் ஒலிப்பது போல் ஒலிக்க வேண்டும்
…
யங்ஙனம் நகரத்திற்கும் ணகரத்திற்கும் இடைப்பட்ட ஒலியாய் னகரம் இருக்கிறதோ அதுபோலவே தகரத்திற்கும் டகரத்திற்கும் இடைப்பட்ட ஒலியாய் இருத்தல் வேண்டும்
…நா மேல் அண்ணத்தை வருடுவதால் ஏற்படும் ஒலியான tRa என ஒலித்தல் தவறு
…
…டகரத்தைச் சொல்லும் போது நா குவிந்து அழுத்தமாக வாயின் மேல்ப்பகுதியில் இணைகிறது அங்ஙனம் குவியாது நாவை விரித்து சற்று குறைந்த அழுதத்துடன் அதே டகரத்தை ஒலிக்கும் போது பிறப்பது றகரம்
…இன்னொரு வழி யாதெனில்
…தகரத்தைச் சொல்லும் போது நா பல் அல்லது அண்பல் பகுதியைத் தொடுகிறது அதே நாவால் அண்ணத்தை(சற்று உட்புற மேல்வாய்) தொட்டு தகரத்தை ஒலிக்கும்போதும் பிறப்பது றகரமே
…
…கவனித்துக் கேட்டால் T எனும் எழுத்தின் ஒலியைப் பெறும்
…
…சில போல்மங்கள்
…1. நன்றி = nanti
…2. ஸ்ற்றாலின் = Stalin
…3. ஸ்ற்றோர் = store
…4. ஸ்ற்றேஷன் = station
…5. ற்றீத் = teeth
…6. மெயின்றெய்ன் = maintain

குறிச்சொற்கள்:
ஓகஸ்ட் 6, 2012

தமிழ் எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறை – 3

றகரம்

டகரம் றகரம் தகரம் இவற்றின் இன எழுத்துகளான ணகரம் னகரம் நகரம் என்பவை ஒரேபோன்ற ஒலிப்பு முறையை உடையன
சற்று கவனித்தால் மட்டுமே வேறுபாடு புலப்படும்
இது போலவே டகரம் றகரம் தகரம் என்பவை ஒத்த ஒலிப்புமுறையைக் கொண்டிருக்க வேண்டும்
அனால் டகரமும் தகரமும் tda tha என்ற ஒலிப்பினை பெற்று றகரம் மட்டும் Ra அல்லது tRa எனும் ஒலிப்பைப் பெறுவது முரணானது
தொல்காப்பிய இலக்கணப் படி நோக்குங்கால் தகரம் நகரத்தைப் போன்று பல் அல்லது அண்பல்(பல்லும் வாயும் இணையும் பகுதி) என்ற இடத்தில் நா பொருந்த பிறக்கிறது டகரம் ணகரம் போன்று அண்ணத்தில் நுனிநா வீங்கி அழுந்திப் பொருந்த உருவாகிறது

இதைக் கொண்டு பார்க்கும் போது றகரம் னகரம் பிறக்கும் அதே இடத்திலும் அதே அளவு அழுத்ததிலும் பிறக்கவேண்டும் அதாவது நுனிநா விரிந்து அண்ணத்துடன் ஒற்றும்போது பிறக்கவேண்டும் அதே நேரம் டகரத்தையும் தகரத்தையும் ஒலிப்பது போல் ஒலிக்க வேண்டும்

எப்படி நகரத்திற்கும் ணகரத்திற்கும் இடைப்பட்ட ஒலியாய் னகரம் இருக்கிறதோ அதுபோல் தகரத்திற்கும் டகரத்திற்கும் இடைப்பட்ட ஒலியாய் இருத்தல் வேண்டும்
நா மேல் அண்ணத்தை வருடுவதால் ஏற்படும் ஒலியான tRa என ஒலித்தல் தவறு

டகரத்தைச் சொல்லும் போது நா குவிந்து அழுத்தமாக வாயின் மேல்ப்பகுதியில் இணைகிறது அங்ஙனம் குவியாது நாவை விரித்து சற்று குறைந்த அழுதத்துடன் அதே டகரத்தை ஒலிக்கும் போது பிறப்பது றகரம்
இன்னொரு வழி யாதெனில்
தகரத்தைச் சொல்லும் போது நா பல் அல்லது அண்பல் பகுதியைத் தொடுகிறது அதே நாவால் அண்ணத்தை(சற்று உட்புற மேல்வாய்) தொட்டு தகரத்தை ஒலிக்கும்போதும் பிறப்பது றகரமே

கவனித்துக் கேட்டால் T எனும் எழுத்தின் ஒலியைப் பெறும்

சில போல்மங்கள்
1. நன்றி = nanti
2. ஸ்ற்றாலின் = Stalin
3. ஸ்ற்றோர் = store
4. ஸ்ற்றேஷன் = station
5. ற்றீத் = teeth
6. மெயின்றெய்ன் = maintain

குறிச்சொற்கள்:
நவம்பர் 23, 2011

தமிழ் எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறை – 2

ஆய்த எழுத்து

(இதையும் பலர் சரியாக ஒலிப்பதில்லை)

பலர் ஆயுத எழுத்து என்று கூறுவார். கேடயத்தின் புள்ளிகளைப் போல் அமைந்துள்ளதால் அது ஆயுதம் என அழைக்கப் பட்டது என்பரும் உளர்.

இப்படி தான் பள்ளிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஆனால் உண்மை யாதெனில் இது ஆய்த எழுத்து. முப்புள்ளி வடிவம் பிற்காலத்தில் கொடுக்கப் பட்டதே. ஆயுத எழுத்து அல்ல. ஆயுதம் என்பது வடமொழிச் சொல் என்பதையும் இங்கு நாம் அறிவது வேண்டும்.

இது ஒரு சார்பு எழுத்து இதற்கென்று தனி ஒலிவடிவம் கிடையாது. குற்றிய உகர இகரங்களைப் போல் இது ஒரு சொல்லிலமைந்தால் தான் ஒலிவடிவம் பெறும். குற்றிய உகர இகரங்களில் உகர இகரங்கள் மெய்யில் ஏறி மெய்போலகிவிடுவது போல் ஆய்தம் தான் இடப்பெயர்வு செய்த வல்லின மெய்யில் ஆய்ந்து விடுகிறது. அதாவது அந்த எழுத்தின் மேல் பதிந்து விடுகிறது.

எப்படி என்று பார்ப்போம்

அல் + திணை = அற்றிணை (திணை அல்லன = ஒழுக்கம் அற்றவை)

இதில் ற் என்ற எழுத்தை நீக்கி ஆய்தம் வந்து அஃறினை ஆகிறது. இதை பலர் அக்றிணை என்று சொல்லுவர். இது மிகுந்த தவறு

ஃ என்பதற்கு க் எனும் ஒலி கொடுக்கப் பதில் அது தனி ஒலிவடிவம் பெற்றதாய் ஆகிறது இதனால் அதன் சார்புத் தன்மை கெடும்.

எஃகு என்பது எக்கு என்பதிலிருந்து வருவிக்கப் பட்டது இதனை எஹ்ஹு என்று வாசிக்க வேண்டும்

அஃது என்பது அத்து என்பதிலிருந்து வருவிக்கப் பட்டது இதனை அத்து(நாக்கு பல்லில் படாமல்) என்று வாசிக்க வேண்டும்.

கஃசா என்பதை kassa என்று வசிக்க வேண்டும்

ஃ வந்தால் கீழ்வாயும் அதன் எந்த உறுப்பும் மேல் தொடக் கூடாது இதனால் தான் f எனும் எழுத்தை எழுதுவதற்கு ஆய்த எழுத்தின் துணையை முன்னோர் நாடினர் ஹ எழுதுவதற்கும் பயன் படுத்தினர்.

ப என்பதை மேல் உதடு கீழ் உதடுடன் இணையாது சொல்லிப் பாருங்கள் fa என்றாகும்.

க என்பதை நா(கீழ்வாய் உறுப்பு) அண்ணத்துடன்(மேல்வாயுறுப்பு) இணையாது சொல்லிப் பாருங்கள் ஹ என்றாகும்.

அகத்தியரின் இலக்கண நூலில் இதை அகேனம்(அஃகேனம்) என்றுமாற்றி இதனை வடமொழி அஹ எனும் எழுத்திலிருந்து தோன்றியதாக காட்ட முயற்சிக்கப் பட்டது என்றே கூறலாம். ஆனால் இப்படி அது தனி ஒலிவடிவம் பெறுவது சார்பெழுத்தாகுதலின் தகுதியிலிருந்து அதை நீக்கி விடும். சார்பெழுத்து என்பது திண்ணம் ஆதாலால் அஹ எனும் ஒலிவடிவம் தவறானதே. அஹ என்பதை மனதில் நிறுத்தியே அஃது என்பது அஹ்து என்று ஒலிக்கப் படுகிறது. இப்படி ஆனதற்கு பின்னால் தமிழ் மொழி எதிர்ப்பாளர்களின் வஞ்சனையும் இருக்கலாம்.

இனியாவது சரியாய் ஒலிக்க முயலலாம்.

குறிச்சொற்கள்:
நவம்பர் 21, 2011

தமிழ் எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறை – 1(Proper pronunciation of Thamizh letters -1)

தமிழகத்தில் வாழும் 99 விழுக்காட்டினர் தமிழ் எழுத்துகளின் சரியான ஒலிப்பு முறையை அறியாதவர்களே ஆவர் ழகரத்தை ஒலிக்கும் போது பொதுவாக பலர் தவறிழைப்பர் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே றகரம் சகரம் இதனை ஒலிக்கும் பொது பலர் தவறிழைக்கின்றனர் என்பது பலர் அறியாதது.

றகரம் என்பதன் சரியான ஒலிப்பு முறை ‘tagaram ‘ என்பதே ஆகும்
ஆதாரம்
“அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்” -தொல்காப்பியம்

இதிலிருந்து றஃகான் னஃகான் போன்ற எழுத்தினை ஒலிக்கும் பொது நுனி நா விரிந்து அண்ணம் தொட்டு திரும்பும் என்பது ஐயத்திற்கு இடம் இன்றி தெரிகிறது ஒரே வேறுபாடு ஒலி வாய் வழியாய் வெளிப்படுவதும் மூக்கு வழியாய் வெளிப்படுவதுமேயாகும்.

ஆதாரம்
“மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும்” – தொல்காப்பியம்

மேலும் வல்லெழுத்துகளுக்கு ஒலி வடிவம் தரும் பொழுது காற்று திடீரென வன்மையாக கிளம்பும் இது நாள் தட்டுவது மோதுவது விழுவது போன்ற வல் ஒலிகள் ஏற்படும் என்பதால் தான் இதற்கு வல்லினம் என்று பெயராயிற்று
எடுத்துக்காட்டு
க – ka
ச – cha
ட – tda
த – tha
ப – pa
இப்பொழுது றகரத்திற்கு வருவோம் ற என்பதை Ra என்று ஒலித்துப் பாருங்கள் இதில் எந்த வன்மையும் இல்லை இப்பொழுது அதையே ta (tea என்பதில் வருவது போல்) என்று ஒலித்துப் பாருங்கள் வல் ஒலி வருகிறது. இதனால் தான் தமிழிலிருந்து பிரிந்து போன மலையாளத்தில் இன்றும் tea ற்றி என எழுதுகிறார்கள். நன்றி – nanti வெற்றி – vetti கொற்றனார் – kottanaar

சகரம் என்பதன் சரியான ஒலிப்பு முறை chagaram என்பதே ஆகும்
ச என்பதை sa என்று ஒலித்துப் பாருங்கள் இதில் எந்த வன்மையும் இல்லை இப்பொழுது அதையே cha என்று ஒலித்துப் பாருங்கள் வல் ஒலி வருகிறது.
செங்கல் – chengal
செம்மை – chemmai
சருகு – charugu

சொல்லின் இடையில் வரும்போது
உயிர் அல்லது உயிர்மையைத் தொடர்ந்து வரின் சகரம் ssa என்று ஒலிக்கும் (s க்கும் ch க்கும் இடைப்பட்ட மென்மையான ஒலி).
எடுத்துக்காட்டு : காசு வீசு தூசு கசப்பு
மெல்லினம் (இன எழுத்தினைத்) தொடர்ந்து வரின் ch (s ) (ch க்கும் s க்கும்)
எடுத்துக்காட்டு : பஞ்சு கொஞ்சம் வஞ்சனை
சொல் முதலில் வரின் அல்லது வல்லின மெய் தொடர்ந்து வரின் ch என்று வன்மையுடன் ஒலிக்கும்.

இது போல் தான் றகரமும் உயிர் அல்லது உயிர்மெய் தொடர்ந்து வரின் அது Ra என்று ஒலிக்கும். மெல்லினம் (இன எழுத்தினைத்) தொடர்ந்து வரின் t எனும் எழுத்துக்கு சற்று மென்மைத் தன்மை கொடுத்தார் போல் ஒலிக்கும்.

மலேசியா சிங்கப்பூர் இலங்கை கன்னியாகுமரி பகுதியில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் இதை இன்றும் கையாளுகின்றனர்

குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 26, 2011

Hydrogen – க்கான தமிழ்ச் சொல்

Hydrogen – க்கான தமிழ்ச் சொல் 

Hydragen = நீராக்கி

     பிற மொழிச் சொல்லை தமிழ் மொழிக்கு பெயர்க்கையில் மூலச் சொல் உதவி கொண்டு மொழி பெயர்த்தால் தான் பொருளுள்ள சொல்லை உண்டாக்க முடியும்

     அங்ஙனம் பார்க்கில் ‘Hydrogen‘ எனும் சொல் ‘Hydro’ ‘Gen’ எனும் இரு பதங்கள் அடங்கியது ஆகும் Hydro என்றால் நீர்மம் பொருள் படும்  Gen என்றால் உண்டாக்கு பொருள் படும் உண்டாக்கு என்பதை ஆக்கு என்றும் சொல்லலாம் ஆக Hydrogen என்பதை நீர்மமாக்கி என்று குறிக்கலாம் ஆனால் எல்லா நீர்மங்களும் Hydrogen ஆல் உண்டாக வில்லை இதனால் நீராக்கி என்று சொல்வதே மிகப் பொருத்தம்

 என்னுடைய பரிந்துரை

     Hydrogen = நீராக்கி   (நீராக்கி வளி என்றும் கூறலாம்

குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 26, 2011

Gene – க்கான தமிழ் சொல்

 Gene – க்கான தமிழ் சொல். 

 …Gene = பிறைமையம்

     தமிழ்ச்சொல் உருவாக்கம் மூலச்சொல்லைக் கொன்டு அமைந்தால் தான் பொருளுள்ள சொல்லை உருவாக்க முடியும்.  அங்ஙனம் பார்க்கில். ‘Gene’ என்பதன் மூலச் சொல் ‘Gen’ ஆகும் இதன் பொருள் பிறப்பு உண்டாக்கு என்பனவாகும் இதனை முதலில் பயன்படுத்தியவர் Wilhelm L. Johannsen என்பவரே ஆவார் பிறவிப் பண்புகளை எடுத்துச் செல்வதால் தான் அதற்கு இப்பெயரை வைத்தார் ஆக Gene என்னும் பததிற்கு தமிழ் சொல் காணுகையில் பிறவிப் பண்பைக் கொண்டது எனும் பொருள் வெளிப்படுமாறு சொல் அமைய வேண்டும் பண்பிற்கு தன்மை குணம் என்பன பொருளாய் வரும் இப்பொழுது பிறப்பு எனும் பதத்தையும் பண்பு எனும் பதத்தையும் இணைக்க வேண்டும்.
…
…    இதற்கு தன்மை எனும் சொல் எவ்வாறு தொன்றியது என்ற ஆராய்ச்சி கை கொடுக்கும் தன் பண்பு என்பதே தன்மை ஆயிற்று இதற்கு ஆதாரங்களாய் இறைமை (இறை பண்பு) ஆண்மை (ஆண் பண்பு) பெண்மை (பெண் பண்பு) பேதமை (பேதை பண்பு) போன்ற பதங்களைக் கூறலாம் ஆக பிறப்பு பண்பு என்பதை பிறமை என்று கூறலாம் ஆனால் ஒசை அமைதி விதி கருதி இதை பிறைமை என்று மாற்றுவதே நலம்
…
…    இப்பொழுது பிறப்பும் பண்பும் இணைந்து பிறைமை ஆகிவிட்டது ஆனால் பிறைமை என்பது ஒரு பொருளைக் குறிப்பது போல் இல்லை இதற்காய் அம் விகுதி சேர பிறைமையம் ஆகும்
…
…என்னுடைய பரிந்துரை
…Gene = பிறைமையம்
…     பிறைமி, பிறைமியம் என்றும் கொள்ளலாம்

குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 21, 2011

21-10-2011

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

 1. அலமாரி
  1. பேழை
 2. கீர்த்தி
  1. புகழ்
 3. சபை
  1. மன்றம்
 4. சவால்
  1. அறைகூவல்
 5. சாவி
  1. திறவுகோல்
  2. தாழ்கோல்
 6. நமஸ்காரம்
  1. வணக்கம்
 7. நிம்மதி
  1. மன அமைதி
  2. கவலையின்மை
  3. வருந்`தாது
 8. நிர்மூலம்
  1. வேரில்லா
  2. வேரறு
  3. மூலமில்லா
  4. கருவறுந்த
 9. பவித்ரம்
  1. களங்கமில்லா
  2. களங்கா
 10. ஸ்துதி
  1. பாராட்டு
  2. புகழ்ச்சி
 11. ஜ்வலித்தல்
  1. மிளிருதல்
 12. ஜ்வாலை
  1. சுடர்
 13. ஜாஸ்தி
  1. மிகுதி
 14. ஜோதி
  1. ஒளி
குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 16, 2011

16-10-2011

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

எமன்

  1. காலன் 

காயம்

  1. உடல்
  2. புண்

கோஷம்

  1. முழக்கம்

சம்பாஷனை

  1. உரையாடல்

சூரியன்

  1. பரிதி
  2. வெய்யோன்
  3. பகலோன்
  4. ஞாயிறு
  5. கதிரவன் 

தைலம்

  1. மருந்து

ரசம்

  1. சாறு

லட்சணம்

  1. இலக்கணம்
  2. ஒழுங்கு

வர்ணம்

  1. நிறம்

விஷ்வம்

  1. பெரிய 

ஜூஸ்

  1. சாறு
குறிச்சொற்கள்:
ஒக்ரோபர் 13, 2011

13-10-2011

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

அதிர்ஷ்டம்

 1. கருதாநலம்
 2. நோக்காநலம்
 3. எதிர்பாரா வாய்ப்பு

அனுகூலம்

 1. சாதகம்
 2. ஒத்துழைப்பு
 3. உதவி
 4. ஒத்தாசை

அனுசரணை

 1. இசைவு
 2. உதவி

அனுபவம்

 1. துய்த்தறிவு
 2. துய்ப்பு
 3. பட்டறிவு

சனி

 1. காரி

சிங்கம்

 1. அரி

துரதிர்ஷ்டம்

 1. கருதாகேடு
 2. நோக்காகேடு
 3. பாராகேடு

ப்ரச்சாரம்

 1. பரப்புரை

ரெடி

 1. ஆயத்தம்

ஜாமீன்(ஜாமின்)

 1. பணையம்

ஜோதிடம்

 1. நிமித்தம்
குறிச்சொற்கள்: